jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Sunday, April 8, 2012

Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி

பெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும்.
ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம், இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கான காரணம் என்று பார்த்தால் அந்த Safely Remove Hardware Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும், எனவே நாம் அதை கவனிப்பதில்லை.
இதற்கு மாற்றாக உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்படி செய்யலாம்.
விண்டோஸ் 7ல் இதை செய்வதற்கு,
Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் “regedit” என்பதை கொடுத்து ok கொடுக்கவும்.
பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் Desktop Background Option – இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது HKEY_CLASSES_ROOTDesktopBackgroundShell )
உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில், தற்போது Shellஐ ரைட் கிளிக் செய்யுங்கள், அதில் New–> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீயை உருவாக்கி கொள்ளுங்கள்.
தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள்.
icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள், அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள்.
தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள். அதற்கு தலைப்பு command என கொடுங்கள்.
அதன் உள்ளே மதிப்பு ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்க வேண்டும் C:WindowsSystem32control.exe hotplug.dll
இதன் பின் உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்.

0 comments:

Post a Comment