jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Thursday, July 28, 2011

நண்பர்களை கூகுள் ப்ளஸ் ill தடை செய்வதற்கு

 பேஸ்புக்கை காட்டிலும் கூகுள் பிளஸ் சமூக இணையதளம் உபயோகப்படுத்த மிகவும் சுலபமாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த தளம் 20 மில்லியன் வாசகர்களை தாண்டி விட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் சோதனை பதிப்பிலேயே வைத்திருக்க காரணம் வாசகர்களின் கருத்துக்களை கண்டறியவே.
சமூக இணையதளங்களில் பெரும்பாலும் நாம் பகிரும் தகவல்கள் நம்முடைய கணக்கில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் சென்றடையும்.
அவர்களும் தகவல்களை பார்த்து அதற்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கூகுள் பிளசில் நாம் பகிரும் தகவலை ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்காத வண்ணம் தடை செய்யலாம்.
அவ்வாறு செய்த பின்
1. அவருடைய அப்டேட்கள் இனி உங்கள் Stream பகுதியில் அப்டேட் ஆகாது.
2. நீங்கள் அப்டேட் செய்யும் செய்திகளுக்கு அவரால் கமென்ட் கூட போட முடியாது.
3. Block செய்வதால் உங்கள் Circle-ல் இருந்து நீக்கப்படுவதால் உங்களின் அப்டேட்கள் அவருக்கு செல்லாது.
4. ஆனால் முக்கியமான விடயம் நீங்கள் Public பகுதியில் பகிரும் விடயத்தை தடை செய்தாலும் அவரால் பார்க்க முடியும்.
இதற்கு முதலில் அந்த குறிப்பிட்ட நபரின் புரோபைல் பக்கத்திற்கு செல்லுங்கள். அவர் ஏதாவது கேமென்ட் போட்டிருந்தாலோ, உங்கள் circle-ல் அவர் இருந்தாலோ அந்த பொட்டோவை க்ளிக் செய்தால் அவரின் புரோபைல் பகுதிக்கு அழைத்து செல்லும்.
அடுத்து வரும் விண்டோவில் Block என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும். அங்கு உள்ள Block பட்டனை அழுத்தினால் அவரின் ஐடி தடை செய்யப்பட்டு விடும்.  இனிமேல் உங்கள் அப்டேட்களை அவரால் பார்க்க முடியாது.

விளம்பரங்களை பேஸ்புக்கில் தடை செய்வதற்கு

பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது. குரோம் உலாவியில் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.
இணையதளம்

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கு

உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும்.இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும்.
மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம்.
பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
இணையதளம்

online dictionary வீடியோ விளக்கத்துடன்

Wordia  dictionary  .
இது சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது.
 . உங்களுக்கு விருப்பமான சொல்லுக்கு வீடியோ  விளக்கத்தை Upload செய்யலாம்.உங்கள் வீடியோக்கள் முகப்பு பக்கத்திலேயே  புகைப்படங்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன. 
ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இணையதளம்