பெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும்.
ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம், இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கான காரணம் என்று பார்த்தால் அந்த Safely Remove Hardware Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும், எனவே நாம் அதை கவனிப்பதில்லை.
இதற்கு மாற்றாக உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்படி செய்யலாம்.
விண்டோஸ் 7ல் இதை செய்வதற்கு,
Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் “regedit” என்பதை கொடுத்து ok கொடுக்கவும்.
பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில்...