சில நேரங்களில் விண்டோஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது முக்கிய குறிப்புக்காக இணையம் தேவைப்படும் போது கணணியை மறுதொடக்கம் செய்து உபுண்டு செல்ல நேரம் தேவைப்படும் இவ்வாறு நேரத்தை வீணாக்காமல் Sun virtual box என்ற இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து விண்டோஸ் அல்லது உபுண்டுவிலோ நிறுவிக் கொள்ளுங்கள். விண்டோஸ், உபுண்டு இதற்கு ஏற்றவாறு Sun virtual boxயை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உங்களுக்கு தேவையான மற்றொரு இயங்குதளத்தை நிறுவிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் தேவைக்கு ஏற்றவாறு ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு சில நொடிகளில் மறுதொடக்கம் ஏதும் செய்யாமல் Virtual box வந்து தேர்வு செய்யலாம்.
இதில் ஒரே ஒரு குறை என்வென்றால் System Speed கொஞ்சம் குறைவு. மற்றபடி இரண்டு இயங்குதளமும் தனித்தனி நினைவகம் தேவை இல்லை. இரண்டும் பகிர்ந்து கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பு. கணணியும் பாதுகாப்பாக இருக்கும்.
தரவிறக்க
0 comments:
Post a Comment