jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Monday, May 2, 2011

நாம் விரும்பும் இணையப்பக்கங்களை like செய்ய Facebookக்கின் புதிய வசதி


இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் தளம் நம்மை கவர்ந்தால் அதனை பேஸ்புக் உதவியோடு விருப்பமானதாக ஆக்கி கொள்ளலாம். பேஸ்புக் அறிமுகம் செய்த like வசதி இதனை சாத்தியமாக்குகிறது.
இப்படி தளங்களையும், இணைய பக்கங்களையும் விரும்புவதன் மூலம் அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது விஷேசம். ஒரு விதத்தில் இது புக்மார்கிங் சேவை போல தான்.
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் இணையதளம் நம்மை கவர்ந்தால் அதனை உடனடியாக குறித்து வைத்து கொள்வோம் அல்லவா? இணைய யுகம் என்பதால் இப்படி தளங்களை குறித்து வைக்க காகிதத்தையோ நோட்டு புத்தகத்தையோ தேட வேண்டியதில்லை. இதற்காக என்றே புகமார்கிங் சேவைகள் இருக்கின்றன.
இதே வசதியை பேஸ்புக் மிகவும் எளிமையாக்கி லைக் சேவையாக அறிமுகம் செய்தது. எந்த ஒரு இணைய பக்கம் பிடித்திருந்தாலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லைக் பட்டனை கிளிக் செய்து நமது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இதன் விளைவாக இணையவாசிகள் அந்த தளம் பிடித்தமானதாக இருந்தால் விருப்ப பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. அப்படியே அந்த தளம் அல்லது இணைய பக்கத்தை தங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த வசதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளங்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டது. இணையதளங்களை பொருத்தவரை இந்த வசதி சுலபமான விளம்பரமாக அமைந்தது. இணையவாசிகளை பொருத்தவரை தாங்கள் விரும்பும் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்தது.
ஆனால் இந்த லைக் சேவையில் உள்ள ஒரே குறைபாடு விருப்பம் தெரிவித்த பக்கங்களை சேமித்து வைப்பது சாத்தியமில்லை என்பது தான். எனவே எப்போதோ விரும்பினோமே என்று நினைத்து கோண்டு ஒரு பக்கத்தை தேட முற்பட்டால் அது சாத்தியம் இல்லை.
இந்த குறையை போக்கும் வகையில் லைக் ஜர்னல் தளம் உதயமாகியுள்ளது. இந்த சேவையின் மூலமாக பேஸ்புக் பிரியர்கள் தாங்கள் விரும்பும் இணைய பக்கங்களை சேமித்து வைத்து கொள்லலாம். கருத்துக்கள் மற்றும் வீடியோவோடு ஒரே இடத்தில் வைத்து கொள்ளலாம். பின்னர் எப்போது தேவையோ அவற்றை தேடிப்பார்க்கலாம்.
இந்த இணைப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஒன்று மற்ற பேஸ்புக் சார்ந்த சேவை போல் இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒருவரது பேஸ்புக் பக்கத்தினுள் நுழைவதற்கான அனுமதியை இந்த தளத்திற்கு வழங்க வேண்டும்.
இணையதளம்

0 comments:

Post a Comment