jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Friday, May 27, 2011

அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல

அனிமேசனில்  நம் முகத்துடன் அனுப்பலாம்.
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம், வெற்றி பெற்ற நாள், பாரட்டுவிழா, பண்டிகைகள், விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான். இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை Click செய்து அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை  Click செய்து   நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து எல்லாம் சரியாக தேர்ந்தெடுத்த பின் Done என்பதை  Click செய்து வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம்.
அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற button Click செய்துஅனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதளம்

Friday, May 20, 2011

கணணியில் Driver ஜ backup செய்ய

பலர் கணணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை  backup எடுப்பது இல்லை.
இதனால் நீங்கள் திடீரென்று எதாவது பிரச்சினை என்று கணணியை முழுதும் Format செய்து பின்  operating systems  போட்டுமுடிந்ததும் driver install செய்ய Motherboard CD ஜ தேடினால்
அது  இருக்காது.
அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver. இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து Device Driverகளையும் backup எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.

தரவிறக்க

Saturday, May 14, 2011

நாம் பயன்படுத்தும் இணைய உலாவியில் தகவல்கள் திருடப்படுகின்றதா என்பதை கண்டறிய

 நாம் பயன்படுத்தும் பிரவுசரை தாக்கி நம் கணணியில் இருக்கும் தகவல்களை கொள்ளை அடிக்கும் வழக்கம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சிறிய அளவில் சாதாரனமான ஸ்கிரிப்ட் மூலம் கூட தகவல்களை திருடுகின்றனர். சில நேரங்களில் நம் பிரவுசரில் இது போன்ற ஸ்கிரிப்ட் இருப்பது கூட நமக்குத் தெரியாது. இதற்கு தீர்வாக புதிய இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.
ஓன்லைன் மூலம் நம் பிரவுசரை எளிதாக சோதித்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று எளிதாக அறியலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், ஓப்பரா போன்ற பிரவுசர்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஓன்லைன் மூலம் சோதித்து சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்.
கீழே குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று Start the test என்ற பட்டனை அழுத்தி நம் பிரவுசரை சோதிக்கலாம். சில நிமிடங்களில் நம் பிரவுசர் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற தகவல்களையும் கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பிரவுசரை அடிக்கடி சோதித்துக் கொள்வதால் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இணையதளம்

Saturday, May 7, 2011

கணணியை restart செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற

 சில நேரங்களில் விண்டோஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது முக்கிய குறிப்புக்காக இணையம் தேவைப்படும் போது கணணியை மறுதொடக்கம் செய்து உபுண்டு செல்ல நேரம் தேவைப்படும்  இவ்வாறு நேரத்தை வீணாக்காமல் Sun virtual box என்ற இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து விண்டோஸ் அல்லது உபுண்டுவிலோ நிறுவிக் கொள்ளுங்கள். விண்டோஸ், உபுண்டு இதற்கு ஏற்றவாறு Sun virtual boxயை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உங்களுக்கு தேவையான மற்றொரு இயங்குதளத்தை நிறுவிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் தேவைக்கு ஏற்றவாறு ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு சில நொடிகளில் மறுதொடக்கம் ஏதும் செய்யாமல் Virtual box வந்து தேர்வு செய்யலாம்.
இதில் ஒரே ஒரு குறை என்வென்றால் System Speed கொஞ்சம் குறைவு. மற்றபடி இரண்டு இயங்குதளமும் தனித்தனி நினைவகம் தேவை இல்லை. இரண்டும் பகிர்ந்து கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பு. கணணியும் பாதுகாப்பாக இருக்கும்.
தரவிறக்க

உங்கள் கணணி பற்றிய தகவல்களை பார்க்க

உங்கள் கணணியில் உள்ள மதர்போர்டு, மெமரி, மற்றும் கணணி பற்றிய அனைத்து தகவல்களும் உடனடியாக ஒரே விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் பெயர் CPU-Z என்பதாகும். இதன் அளவு மிக குறைந்த அளவு தான்.
இதை உங்கள் கணணியில் தரவிறக்கி கொண்டால் போதும். அதன் பின் அதை ரன் செய்தால் அதில் உங்கள் கணணியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து விடும்.
உங்கள் CPU- வை பற்றி தெரிவிக்கும். உங்கள் கணினியின் cache மெமரியின் அளவை காண்பிக்கும். அதுமட்டுமில்லாமல் மதர்போர்டு, ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் பற்றிய அனைத்து அளவுகளையும் இது உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறது.
தரவிறக்க

தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது கணணியை Sleepஇற்கு செல்லவிடாமல் தடுக்கும் tool

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணணியை அணையவிடாமல் வைத்திருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் பவர் ஓப்ஸனை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
இதற்காகவே Coffee என்ற டூல் பயன்படுகிறது. இந்த போர்டபிள் டூலை ரன் செய்து தேவையான KB அளவையும் தேர்வு செய்துவிட்டால் குறிப்பிட்ட தரவிறக்கம் முடியும் வரை கணணி அணையாமல் வேலை செய்தபடி இருக்கும்.
தரவிறக்க

Monday, May 2, 2011

நாம் விரும்பும் இணையப்பக்கங்களை like செய்ய Facebookக்கின் புதிய வசதி


இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் தளம் நம்மை கவர்ந்தால் அதனை பேஸ்புக் உதவியோடு விருப்பமானதாக ஆக்கி கொள்ளலாம். பேஸ்புக் அறிமுகம் செய்த like வசதி இதனை சாத்தியமாக்குகிறது.
இப்படி தளங்களையும், இணைய பக்கங்களையும் விரும்புவதன் மூலம் அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது விஷேசம். ஒரு விதத்தில் இது புக்மார்கிங் சேவை போல தான்.
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் இணையதளம் நம்மை கவர்ந்தால் அதனை உடனடியாக குறித்து வைத்து கொள்வோம் அல்லவா? இணைய யுகம் என்பதால் இப்படி தளங்களை குறித்து வைக்க காகிதத்தையோ நோட்டு புத்தகத்தையோ தேட வேண்டியதில்லை. இதற்காக என்றே புகமார்கிங் சேவைகள் இருக்கின்றன.
இதே வசதியை பேஸ்புக் மிகவும் எளிமையாக்கி லைக் சேவையாக அறிமுகம் செய்தது. எந்த ஒரு இணைய பக்கம் பிடித்திருந்தாலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லைக் பட்டனை கிளிக் செய்து நமது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இதன் விளைவாக இணையவாசிகள் அந்த தளம் பிடித்தமானதாக இருந்தால் விருப்ப பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. அப்படியே அந்த தளம் அல்லது இணைய பக்கத்தை தங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த வசதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளங்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டது. இணையதளங்களை பொருத்தவரை இந்த வசதி சுலபமான விளம்பரமாக அமைந்தது. இணையவாசிகளை பொருத்தவரை தாங்கள் விரும்பும் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்தது.
ஆனால் இந்த லைக் சேவையில் உள்ள ஒரே குறைபாடு விருப்பம் தெரிவித்த பக்கங்களை சேமித்து வைப்பது சாத்தியமில்லை என்பது தான். எனவே எப்போதோ விரும்பினோமே என்று நினைத்து கோண்டு ஒரு பக்கத்தை தேட முற்பட்டால் அது சாத்தியம் இல்லை.
இந்த குறையை போக்கும் வகையில் லைக் ஜர்னல் தளம் உதயமாகியுள்ளது. இந்த சேவையின் மூலமாக பேஸ்புக் பிரியர்கள் தாங்கள் விரும்பும் இணைய பக்கங்களை சேமித்து வைத்து கொள்லலாம். கருத்துக்கள் மற்றும் வீடியோவோடு ஒரே இடத்தில் வைத்து கொள்ளலாம். பின்னர் எப்போது தேவையோ அவற்றை தேடிப்பார்க்கலாம்.
இந்த இணைப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஒன்று மற்ற பேஸ்புக் சார்ந்த சேவை போல் இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒருவரது பேஸ்புக் பக்கத்தினுள் நுழைவதற்கான அனுமதியை இந்த தளத்திற்கு வழங்க வேண்டும்.
இணையதளம்