jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Wednesday, March 14, 2012

புளூடூத் 4....


வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும்.
புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழ் உள்ள தளத்தை அணுகவும்.
  Click here

Wednesday, February 1, 2012

hidden ஆன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு

உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும்.
இந்த Task Manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன் பண்ணவே முடியாது. அதனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும் நிறுத்த முடியாது.
முதலில் டாக்ஸ்பாரில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும். அதன்பின் தோன்றும் விண்டோவில் டாக்ஸ்மேனேஜர் தெரிகின்றதா அல்லது மறைந்துள்ளதா என பாருங்கள்.
அது மறைந்திருந்தால் அதனை கொண்டுவரும் வழியை இப்போழுது காணலாம். முதலில் start கிளிக் செய்துகொள்ளவும். அதில் run ஜ
open செய்துகொள்ளவும்.
அதில் gpedit.msc என type செய்து பின்னர் ok என கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் user configuration ஐ Double click பண்ணவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் Administrative Template என்பதை Double click பண்ணவும், பின் ஓபனாகும் விண்டோவில் system என்பதனை Double click பண்ணவும்.
அதன் பின் Ctl+Alt+Del option என்று உள்ளதை,Double click செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் ஏதாவது ஒன்றில் Double click செய்யவும்.
அதன் பின் Disabled என கிளிக் பண்ணி Apply கொடுக்கவும், பிறகு ok கொடுக்கவும், இப்போது பழையபடி நாம் டாக்ஸ்பாரில் வந்து Right click செய்து பார்த்தால் Task Manager வந்துவிடும்.

இன்டர்நெட் அமைப்பு மாற்றம்

 இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும்.
நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக(Packet) பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணணியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க்(Network) அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால்(Internet Protocol) முகவரியும் தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.
இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.
IPv4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.
நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.

Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டால் . பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.
1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.
2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும். (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும்-secondary hard disk)
3.கணினி இயங்கியதும் Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் விண்டோஸ் இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும்.
4. அதனைத்தொடர்நது windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும்.
5.அங்கு காணப்படும் SAM.exe,SAM.log ஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.
இப்பொழுது அக்கணினியிலிருந்து வன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து இயக்கவும். ஏற்கணவே நிறுவியிருந்த கடவுச்சொல் அகற்றப்பட்டு கணினி சாதாரணமாக இயங்கும்.

Wednesday, December 7, 2011

காந்தத்தினால் மனிதர்களிடம் உண்மையை பெறலாம்ஆய்வில் தகவல்!

காந்தத்தின் மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் வாங்க முடியும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இதன்மூலம், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆனால் வாய் திறக்க மறுக்கிற நபர்களிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட எஸ்தோனிய ஆய்வாளர்கள், காந்தத்தால் மூளையின் முன்பகுதியைத் தூண்ட முடியும். ஒருவர் பொய் சொல்வதை தடுக்க முடியும் என்கிறார்கள். நெற்றிக்கு நேரே பின்புறம் உள்ள `டார்சோலேட்ரல் பிரிபிராண்டல் கார்டெக்ஸ் என்ற மூளைப் பகுதியை காந்தத்தால் தூண்டுவதன் மூலம் ஒருவரை உண்மை சொல்லவோ, பொய் பேசவோ வைக்க முடியும் என்கிறார்கள்.


இப்பகுதியின் இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என்று எதைத் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. ஆனால் மூளையில் பரீட்டல் லோப் பகுதியில் காந்தத்தால் தூண்டுவது, குறிப்பிட்ட மனிதர் முடிவெடுப்பதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள் . நேர்மை, நீதிநெறி குறித்த ஒருவரின் சிந்தனையை சக்திவாய்ந்த காந்தத்தால் மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அப்போ,ஆளுக்கொரு கைபேசி மாதிரி இனி ஒரு காந்தமும் கொண்டு திரிய வேணும்  எண்டு சொல்லுறியள்.

Saturday, November 5, 2011

தொழிநுட்ப நிறுவனங்களின் பெயர் உருவான சூழல்

ட்விட்டர் (Twitter): சிறிய பறவைகள் "குக்கூ' எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத்ததாகக் குறிப்பிட்டார்.
உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார்.
நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.
அமேஸான் கிண்டில் (Amazon Kindle): இ-புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது.
இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர்.
இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது.
இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், "நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப்பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம்.
மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது' என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.
ஆண்ட்ராய்ட் (Android): மொபைல் போனுக்கான கூகுள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாக வில்லை.
ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர் நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.
பிளாக்பெரி (BlackBerry): 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம், தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.
பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர் பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது.
அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது.
மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இறுதியில் பிளாக்பெரி (BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.
ஐபாட் (iPod): ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார்.
எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர்.
ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod மாதிரி இருந்தது.
எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (i) சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.
thx - cnn

Mouse ஆல் வரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க

நம் அன்றாட வாழ்வில் mouse அனைவராலும் பாவிக்கப்படும் ஒன்றாகும்.
கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள் docters. இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர்.
இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.
3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல் பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக் கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.
4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள்.
உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம்.
கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.
5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள்.
வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்து வது இயற்கைக்கு முரணானது.
6. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக மாற்றி, ஏற்கனவே நாம் கம்ப்யூட்டர் மலரில் எழுதிய கார்பல் டனல் பிரச்சினையை உருவாக்கும்.
8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்து வார்கள். இவ்வாறு பயன்படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்னையைத் தரும்.
9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன் பாட்டிலிருந்து மாறுபட்டது.
கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப் பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம்.
ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப் பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப் படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப் புள்ளி யாக வைத்து இயக்கப்பட வேண்டும்.
மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும்.
10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும்பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இது போன்ற வளைவான மவுஸ் பயன்பாட்டிற்குச் சரியானதல்ல.
இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.
11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு சிந்தனைதான்.
thx - cnn