jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Sunday, November 20, 2016

மொபைல்வழி இணையதளத்தில் பார்க்கும் பக்கங்களை pdf கோப்புகளாக மாற்றும் முறை


print_to_pdf_1477381129099-copy

படி 1: மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில்   சென்று வலது மேல்  புறமுள்ள 3  புள்ளிகளை தொடவும்.
படி 2:அதை  தொடர்ந்து வரும்   option- களில்  உள்ள “Print ”  ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி  3:பின்  ” Select Printer ”   ஐ தேர்ந்தெடுக்கவும்.
படி 4:பின்  “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 5:அதில் “save ”   ஐகானை தேர்ந்தெடுக்கவும்.
படி 6:பின்     எங்கு  “Save”    செய்ய   நினைக்கிறோமோ  அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

நன்றி :techtamil

Pixel, Phone by Google



Tuesday, June 12, 2012

Sysrestore Pro 3.3

சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணணிகள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால் சேமிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இவ்வாறு இழக்கப்படும் தரவுகளை மீளப் பெறுவதற்காக Sysrestore, Recovery முறைகள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறான தலைவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக Sysrestore Pro 3.3 மென்பொருள் காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது கணணி சிறந்த நிலையில் இயங்கும் போது ஆயிரக்கணக்கான ஸ்னாப் ஷாட்களை எடுத்துக் கொள்கின்றது. இவற்றைப் பயன்படுத்தி குளறுபடி செய்யும் நிலையிலிருந்து கணணியினை பழைய நிலைக்கு மீட்க முடியும்.

CCleaner new ver.3.0.5


மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 சப்போர்ட், ஐ-ட்யூன்ஸ் குக்கிகள் பராமரிப்பு, விண்டோஸ் பயர்வால் டூலின் தேவையற்ற நிபந்தனை நீக்கம், ஆப்பரா சர்ச் பீல்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கான ஹிஸ்டரி நீக்கம், ரியல் பிளேயர் கிளீனிங், புதிய பிரிவுகளுக்கான “Analyze” and “Clean” வசதி, Advanced Options பிரிவில் மாறா நிலைக்குச் செல்லும்(“Restore default settings”) வசதி, கிளாசிக் மீடியா பிளேயருக்கான சப்போர்ட், பயன்படுத்தப்படாத, பழைய புரோகிராம்களுக்கான ரெஜிஸ்ட்ரி வரிகள் நீக்கம், 64 பிட் கம்ப்யூட்டர்களில் ஷார்ட்கட் கிளீனிங் ஆகிய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. மேலும் சில குறைபாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பினை நிறுவும் போது, சில புதிய வசதிகளுக்கான இன்ஸ்டலேஷனுக்கு புரோகிராம் அனுமதி கேட்கும். அதனை வழங்க வேண்டும்.
இந்த பதிப்பு 32 மற்றும் 64 பிட் விண்டோஸ் சிஸ்டத்தின் அனைத்து(விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 2000 மற்றும் சார்ந்த சிஸ்டங்கள்) பதிப்புகளிலும் இயங்கும்.

இணைய பக்கத்தை Screen Shot எடுப்பதற்கு

 முழு தளத்தையும் நம்மால் ஸ்கிறீன் ஷாட் எடுக்க இயலாது.
Capturefullpage.com
இந்த தளத்தில் சென்று உங்களுக்கு ஸ்கிறீன் ஷாட் எடுக்க வேண்டிய பக்கத்தின் முகவரி மட்டும் கொடுத்தால் போதும், அது முழு பக்கத்தையும் எடுத்து தந்து விடும்.
FireShot - Webpage Screenshots - Firefox Add-On
Firefox Browser-ஐ பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். அதை பேஸ்புக்கில் பகிரலாம், உங்கள் கணணியில் சேமிக்கலாம், பிரிண்ட் செய்யலாம். இதிலேயே இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
Screen Capture - Chrome Add-On
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். இதில் ஸ்கிறீன் ஷாட் எடுக்க பல வித வசதிகளும் உள்ளன. குறிப்பிட்ட பகுதி, முழு பக்கம், முழு ஸ்கிறீன் என இதிலேயும் இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
DuckLink
ஸ்கிறீன் ஷாட் எடுக்க பயன்படும் மிக அருமையான மென்பொருள் என்றால் அது இது தான். இதை நிறுவி விட்டு, தேவையான பக்கத்தை ஓபன் செய்து வைத்துக் கொண்டு ஸ்கிறீன் ஷாட் எடுக்க கிளிக் செய்தால் போதும், அதன் பின்னர் இதிலேயே எடிட் செய்தும் கொள்ளலாம்.

அறிமுகமாகி​ன்றது AMD LiveBox



 AMD நிறுவனமானது LiveBox எனப்படும் மிகச்சிறிய கணணிகளை அறிமுகப்படுத்துகின்றது.
1GB முதன்மை நினைவகத்தைக்(RAM) கொண்டு செயற்படவுள்ள இக்கணினிகள் 1GHz AMD dual core C-60 புரோசசர்களைக் கொண்டுள்ளன.
மேலும் 1080 பிக்சல்கள் அளவிலான உயர் திறனுடைய விம்பங்களை உருவாக்கக்கூடிய திரைகளையும் கொண்டுள்ளது.
இவற்றில் 64GB கொள்ளளவு கொண்ட solid state disk (SSD) எனப்படும் துணை நினைவகம் பொருத்தப்பட்டுள்ளதுடன் 2 x USB 2.0 ports, 1 x HDMI output, Ethernet, memory card, புரோட்பான்ட் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான SIM slot, புளூடூத் ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Sunday, April 8, 2012

Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி

பெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும்.
ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம், இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கான காரணம் என்று பார்த்தால் அந்த Safely Remove Hardware Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும், எனவே நாம் அதை கவனிப்பதில்லை.
இதற்கு மாற்றாக உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்படி செய்யலாம்.
விண்டோஸ் 7ல் இதை செய்வதற்கு,
Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் “regedit” என்பதை கொடுத்து ok கொடுக்கவும்.
பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் Desktop Background Option – இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது HKEY_CLASSES_ROOTDesktopBackgroundShell )
உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில், தற்போது Shellஐ ரைட் கிளிக் செய்யுங்கள், அதில் New–> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீயை உருவாக்கி கொள்ளுங்கள்.
தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள்.
icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள், அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள்.
தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள். அதற்கு தலைப்பு command என கொடுங்கள்.
அதன் உள்ளே மதிப்பு ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்க வேண்டும் C:WindowsSystem32control.exe hotplug.dll
இதன் பின் உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்.