கூகுள் பஸ் தனித்தளத்தில் செயல்படவில்லை. ஜிமெயிலில்(Gmail) ஒரு பகுதியாக தான் செயல்பட்டது.
ஜிமெயிலில் சமீபத்தில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவர்களின் பட்டியலையும், அரட்டை அடித்தவர்களின் பட்டியலையும் மற்றவர்களும் பாக்கக்கூடியவாறு இருந்தது.
மேலும் பஸ்ஸை செயல்நீக்கம்(Disable) செய்யும் வசதியும் இல்லை. இதனால் . பிறகு அதனுடைய தனியுரிமை அமைவுகளை மாற்றி அமைத்தது.
மேலும் அதனை செயல்நீக்கம் செய்யும் வசதியையும் தந்தது.
கூகுள் ப்ளஸ் தளத்திலேயே கூகுள் பஸ் வசதியையும் இணைத்தது. தற்போது கூகுள் ப்ளஸ்ஸில் முழு கவனம் செய்வதால் கூகுள் பஸ் வசதியை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது
இன்னும் சில வாரங்களில் இது நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்பத்திவரும் அதேவேளையில் தனது பல்வேறு வசதிகளை மூடிவருகிறது கூகுள் தளம். மூடப்போகும் வசதிகளில் சில:
1. Code Search: இணையத்தில் உள்ள திறந்த மூல குறியீடுகளை(Open Source Codes) தேடுவதற்கு பயன்பட்ட Code Search என்னும் தேடுபொறி வசதி. இது 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
2. Jaiku: இது ட்விட்டர் போன்ற Micro Blogging தளம். இதனை 2007ஆம் வருடம் கையகப்படுத்தியது கூகுள். இதுவும் 2012 ஜனவரி 15ஆம் திகதி மூடப்படுகிறது.
3. Google Labs: கூகுளின் புதிய திட்டங்களை(Projects) சோதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கூகுள் லேப் தளம் இன்று மூடப்பட்டுவிட்டது.
4. Aardvark: இது சமூக தேடுபோறியாகும்(Social Search Engine). இங்கு நம்முடைய கேள்விகளை கேட்கலாம். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். Yahoo Answers தளம் போன்று. இந்த தளத்தை 2010ஆம் ஆண்டு கையகப்படுத்திய கூகுள் தளம் விரைவில் இதனை மூடப்போகிறது.
5. Google Pack: பல்வேறு பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய பயன்பட்டு வந்த கூகுள் பேக் தளம் இவ்வசதியை நிறுத்திவிட்டது. ஆனால் முக்கிய மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டியை தந்துள்ளது. இன்னும் நிறைய வசதிகளை மூட முடிவெடுத்துள்ளது.