jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Monday, June 20, 2011

கைத்தொலைபேசி கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள


 கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

mail id யை பாதுகாக்க சில வழிகள்


அவர்கள் ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பாதுகாக்க ஒரு சில வழிகள் உண்டு.
1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வேறு தளங்களில் பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிப்பதற்காகவே நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை மின்னஞ்சல் முகவரி என்பதை கணித்து சேகரிக்கும்.
2. சில தளங்களில் Newsletterல் சேருமாரும் அல்லது சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்ய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானது தானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.
3. Gmail, Yahoo போன்றவற்றை கைத்தொலைபேசிகளில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற கைத்தொலைபேசிகளுக்கான மென்பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Passwordஐ கொடுக்க வேண்டும்.
இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள்.
4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான மின்னஞ்சல்கள் வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மின்னஞ்சல் முகவரிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மின்னஞ்சல்கள் வரும்.
சில சமயம் ஆபாசகவும் மின்னஞ்சல்கள் வரும். அது போன்ற மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மின்னஞ்சல்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். பிறகு நமது பணம் களவாடப்படும்.
5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று மின்னஞ்சல்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.

அனைத்து வகையான போர்மட் உடைய கோப்புக்களை திறப்பதற்கு


பலதரப்பட்ட கோப்புக்களை ஓரிடத்தில் ஓபன் செய்துகொள்ள துணைபுரிகிறது FREE OPENER என்ற மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் 70க்கும் மேற்பட்ட வகையான கோப்புக்களை திறந்து கொள்ள முடியும்.
இதன் சிறப்பம்சம்:
1. JPEG,GIF, bmp போன்ற போர்மட் உடைய புகைப்படங்களை திறந்து பார்க்க முடியும்.
2. avi, flv, mid, mkv, mp3, mp4, mpeg, mpg, mov, wmv போன்ற மீடியா கோப்புக்களை திறந்து மீடியா பிளேயராக பயன்படுத்த முடியும்.
3. photoshop, pdf, html, office, java , DOC, xls போன்ற கோப்புக்களையும் இலகுவாக திறந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயற்படவல்ல மிக சிறந்த பயனுள்ள ஓர் மென்பொருளாகும். அத்துடன் இதன் அளவு 20MB ஆகும்.

solar இயங்கும் சார்ஜர்

செர்பியாவில் சூரிய ஒளியினால் இயங்ககூடிய கைத்தொலைபேசிக்கான சார்ஜர் எனப்படும் மின்சக்தி ஊட்டுவானை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
செர்பிய பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த மின்சக்தி ஊட்டுவான் பெல்கிரேடுக்கு வெளியே உள்ள நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உருவாக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கெளரவம் மிக்க பரிசு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்ரோனேவேக் நகரத்தில் எகுவினால் உருவாக்கப்பட்ட சுமார் 5 மீற்றர் உயரம் கொண்ட கம்பியின் மேல் சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு உருவாகும் மின்சாரம் இந்த கம்பியின் கீழே உள்ள 16 வகையான ஒயர்கள் மூலம் வெவ்வேறு விதமான செல்லிடை தொலைபேசிகளுக்கு மின்சக்தியை கொடுக்கின்றது.
இந்த உபகரணத்தை ஸ்ட்ராபெர்ரி மரம் என்று இவர்கள் கூறுகின்றார்கள். இந்த வசதியை பொது மக்கள் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு சூரியசக்தி கொண்டு மின்சக்தியை உருவாக்கியிருப்பதன் நோக்கம் பொதுமக்களிடையே மரபுசாரா மின்சக்தியை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்துவத்தை உணர்த்துவதற்காக தான் என்று கூறப்படுகிறது.
இந்த உபகரணத்தில் மொபைல் தொலைபேசியை சொருகினால் சுமார் 15 நிமிடத்தில் முழுதாக சார்ஜ் ஆகி விடுகிறது. சூரிய ஒளி இல்லாவிட்டால் கூட ஒரு மாதத்திற்கு தேவையான மின்சக்தி இருக்கிறது.
இந்த உபகரணம் உருவாக்கிய பின்னர் கிட்டதட்ட இருபதாயிரம் தடவை சார்ஜ் செய்யப்பட்டு விட்டது. பொது மக்களிடம் இது பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.